பஹ்ரைனில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
பஹ்ரைன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அந்நாட்டு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அபுதாபி சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு முதல்முறையாக, பஹ்ரைன் சென்றார். அங்கு மனாமாவில் உள்ள அல்குடைபியா மாளிகையில், பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, பஹ்ரைன் நாட்டின் இளவரசர் கலிஃபா பின் சல்மானை சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களும், பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பான, உறவுகள் மேம்பட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அங்குள்ளவர்களுக்கு, ஜென்மாஷ்டமி வாழ்த்து கூறினார்.
Next Story