அன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்

இன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அலுவலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.
அன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்
x
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது சி.பி.ஐ. அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள சிபிஐ அலுவலகம் கடந்த 2011 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைக்கராக இருந்த சிதம்பரம் முன்னிலையில் சிபிஐ அலுவலகத்தை திறந்து வைத்தார். 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 186 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசிதிகளுடன் கட்டப்பட்ட சிபிஐ தலைமை அலுவலகம் 11 மாடிகளைக் கொண்டது. விசாரணை அறைகள், சிறைக்கூடம், தங்கும் அறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், மாடித் தோட்டம், 500 பேர் அமரக்கூடிய உணவுக்கூடம் உள்ளிட்டவற்றை சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டுள்ளது. இந்த அலுவலகத்தின் தரைதளத்தில் இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,  தற்போது 4வது தளத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்