ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, 2007ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனமானது, வெளி நாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீடு பெற்றது .இதற்காக, நிதித் துறையின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம், சட்ட விரோதமாக அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த அனுமதி அளிக்கப்பட்டதில் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம், தனது 24 பக்க தீர்ப்பில்,பெரிய அளவிலான இந்த பொருளாதார குற்றம், நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக முதல் பார்வையிலேயே தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.
Next Story