இயற்கை பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.4432 கோடி நிதி ஒதுக்கீடு
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 4 ஆயிரத்து 432 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக 3 ஆயிரத்து 338 புள்ளி 22 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல, வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு ஆயிரத்து 29 புள்ளி 39 கோடி ரூபாயும், பனிச்சரிவு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு 64 புள்ளி 49 கோடியும் நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது. இந்த நிதிகள், தேசிய பேரிடர் மீட்பு படை நிதியில் இருந்து வழங்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Next Story