உன்னாவ் பாலியல் வழக்கு : சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் உள்ளது. இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணையை முடிக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரம் அவகாசம் வழங்குமாறு சிபிஐ கேட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வழக்கறிஞருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
Next Story