காஷ்மீர் பெண்களை ஹரியானாவுக்கு கொண்டு வருவோம் - ஹரியானா மாநில முதலமைச்சரின் பேச்சால் சர்ச்சை
ஹரியானா மாநிலம் பதேஹாபாத்தில் மத்திய அரசின் பெண் குழந்தையை காப்போம் கற்பிப்போம் என்ற திட்டத்தின் வெற்றிக் கூட்டம் நடைபெற்றது.
ஹரியானா மாநிலம் பதேஹாபாத்தில் மத்திய அரசின் பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தின் வெற்றிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், இத்திட்டத்தின் மூலம் கடந்த 2011 கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண்களுக்கு 834 பெண்கள் என இருந்த பாலின விகிதாச்சாரம் தற்போது 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என உயர்ந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். அத்துடன் பிற்காலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் பீகாரில் இருந்து பெண்களை மருமகள்களாக கொண்டு வரலாம் என அமைச்சர் ஒருவர் கூறியதாக தெரிவித்தார். தற்போது 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகு காஷ்மீர் பெண்களையும் இங்கே கொண்டு வருவதற்கான கதவு திறக்கப்பட்டிருப்பதாக பேசியது சர்ச்சை கிளப்பியுள்ளது. சமூக வலை தளங்களில் முதலமைச்சரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Next Story