கேரளாவில் 22 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் : 22 பேர் மழை வெள்ளத்தால் உயிரிழப்பு
கேரளாவில் இதுவரை 22 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இதுவரை 22 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய பேரிடர் மீட்பு படையின் 13 குழுக்கள் கேரளாவிற்கு வந்துள்ளதாகவும் அவர்கள், விரைவில் பாலக்காட்டில் மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். கொச்சி விமான நிலையம் மூடப்பட்டு அங்கு வந்திறங்க வேண்டிய விமானங்கள் திருவனந்தபுரத்தில் வந்திறங்கும் எனவும் அவர் தெரிவித்தார். கேரளா முழுவதும் இதுவரை 315 முகாம்கள் அமைக்கப்பட்டு 22 ஆயிரத்து 165 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், வயநாடு மாவட்டத்தில் தான் அதிகளவில் நபர்கள், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story