ஜம்மு, காஷ்மீரில் அமைதியான சூழ்நிலை :அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் , போராட்டம் ஏதும் இல்லை
ஜம்மு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து திரும்பப் பெறப்பட்ட நிலையில், அங்கு அமைதியான நிலை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இதற்காக மசோதா மாநிலங்களவையில் நேற்றே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது.
இதனையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான படைவீரர்கள் களம் இறக்கப்பட்டு, 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370- நீக்கப்பட்டதை எதிர்த்து எவ்வித போராட்டமோ, கூட்டமோ, எதிர்ப்போ இன்றி இயல்பான அமைதியுடன் ஜம்மு, காஷ்மீர் காணப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்காக ஒரு சிலர் வெளி இடங்களுக்கு சென்று வருவதாகவும், மற்றபடி அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி நிலைமை கட்டுக்குள் உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் தொடர்பு வசதி இல்லாத நிலையில் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக கூறப்படும் நிலையில், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார்.
Next Story