பள்ளி வளாகத்தில் மாணவன் படுகொலை : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்
பீகார் மாநிலம் முசாபர்பூரில் 7ஆம் வகுப்பு படித்து வந்த சுராஜ் குமார் என்ற மாணவன், பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் 7ஆம் வகுப்பு படித்து வந்த சுராஜ் குமார்
என்ற மாணவன், பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான். கடந்த புதன் கிழமை, சுராஜ் குமாரின், தாயின் கை பையை திருடியது தொடர்பாக ஒருவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கைப்பையை திருடிய நபர், சிலருடன் சேர்ந்து சுராஜ் குமாரை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, சுராஜ்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story