கர்நாடக மாநிலஅணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு உபரிநீர் வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த பத்து நாட்களாக கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.முதற் கட்டமாக வினாடிக்கு 800 கனஅடியாக தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுவிற்கு, உபரிநீர் வந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து, ஒன்பதாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து, கூடுதலாக நீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Next Story