"சித்தார்த்தா நேற்று மாயமான நிலையில், அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது"

பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனும், காபி-டே என்ற பிரபல நிறுவனத்தின் அதிபருமான சித்தார்த்தாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
x
பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனும், காபி-டே என்ற பிரபல நிறுவனத்தின் அதிபருமான சித்தார்த்தாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று காலை திடீரென அவர் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம்  கர்நாடக மாநிலம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீட்பு குழுவினர், தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீண்ட நேர தேடுதலுக்கு பின், சித்தார்த்தாவின் உடல், நேத்ராவதி ஆற்றின் கரைப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்