சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் - ரவிக்குமார்
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் வெளியில் இருந்து ஆதரவு அளித்தால் பரிசீலிப்போம் என கர்நாடக பாஜக மாநில செயலாளரும், செய்தித்தொடர்பாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் வெளியில் இருந்து ஆதரவு அளித்தால் பரிசீலிப்போம் என கர்நாடக பாஜக மாநில செயலாளரும், செய்தித்தொடர்பாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பாஜக எம்எல்எக்கள் கூட்டம் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரவிக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 105 எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் உள்ளதாகவும், எனவே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அவர் கூறினார்.
Next Story