காதலியை கொலை செய்த ராணுவ வீரருக்கு வலைவீச்சு
தமிழக - கேரள எல்லையில் ராணுவ வீரரான காதலன் காதலியை கொலை செய்து மண்ணுக்குள் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் அம்பூரி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ராகி மோளும் அதே பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் அகிலனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அகிலனுக்கு வேறொரு இடத்தில் திருமண ஏற்பாடு நடைபெற்றதால், தம்மை திருமணம் செய்யுமாறு ராகிமோள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக அகிலனின் சகோதரர் ரமேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தானும் அகிலனும் சேர்ந்து ராகிமோளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ராணுவத்தில் பணியாற்றி வரும் அகிலனை கைது செய்யும் முயற்சியில் கேரள போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
Next Story