ஆக.20-ல் நிலவின் சுற்று வட்டப்பாதையை சென்றடையும் சந்திரயான் 2
விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான் 2 ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதையை சென்றடையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான் 2 ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதையை சென்றடையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவ பகுதியை ஆராய இந்தியாவின் சந்திரயான் 2 கடந்த 22 ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புவி நீள் வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான் 2வின் வேகம் நேற்று அதிகரிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நிலவை நோக்கி புறப்படும் சந்திரயான் 2 ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள பிரக்யான் ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7 ந்தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Next Story