குடியிருப்போர் நலச்சங்கங்கள் வசூலிக்கும் பராமரிப்பு சந்தாவிற்கு ஜிஎஸ்டி உண்டா? - கலால் வரித்துறை ஆணையர் விளக்கம்
குடியிருப்போர் நலச்சங்கங்கள் வசூலிக்கும் மாதாந்திர பராமரிப்பு சந்தா தொகைக்கு ஜிஎஸ்டி உண்டா என்பது குறித்து ஜிஎஸ்டி மற்றும் கலால் வரித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
குடியிருப்போர் நலச்சங்கம், குடியிருப்போரிடம் இருந்து வசூலிக்கும் பராமரிப்புத் தொகை, ஒரு உறுப்பினருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7ஆயிரத்து 500-க்கும் கூடுதலாக இருக்குமானால், 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த தொகை கூடுதலாக இருந்தால் கூட ஆண்டு வருமானம் 20 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மாதாந்திர பராமரிப்புத் தொகை 7 ஆயிரத்து 500- ரூபாய்க்கும் குறைவாக இருந்து, வருடாந்திர வருமானம் 20 லட்சத்திற்கு அதிகமாக இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே குடியிருப்பு வளாகத்தில், ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று குடியிருப்பு அப்பார்ட்மெண்டுகளை சொந்தமாக வைத்திருந்தால், அவர் ஒவ்வொரு அப்பார்ட்மெண்டுக்கும் தனி தனியாக மாதாந்திர பராமரிப்பு தொகை செலுத்த வேண்டும், ஆனால் அவருக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story