கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைவதில் தாமதம்

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அம்மாநிலத்தில் நிமிடத்திற்கு நிமிடம் அரசியல் காட்சிகள் மாறி வருகின்றன.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைவதில் தாமதம்
x
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தில், நிமிடத்திற்கு நிமிடம், அரசியல் காட்சிகள் மாறி வருகின்றன. ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு, பதவியேற்பு நேரத்தை குறித்த அம் மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, நாளை வியாழக்கிழமை ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவது என்று முடிவு செய்திருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை வரை  ஆட்சி அமைக்கும் முயற்சியில் தாமதம் கடைபிடிக்குமாறு, பாஜக மேலிடம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, சபாநாயகரின் முடிவு - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகிய இரு முக்கிய முடிவுகளுக்குப்பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் உறுதி செய்தன. இதற்கிடையே, கர்நாடகாவில், ஆட்சி அமைக்க தாமதம் ஆவது ஏன்? என்பது குறித்து, எடியூரப்பா விளக்கம் அளித்தார்.

டெல்லி மேலிட உத்தரவுக்காக காத்திருக்கிறேன் - எடியூரப்பா



ஆர்.எஸ்.எஸ். ஆசீர்வாதத்துடன் தாலுகா மட்டத்திலிருந்து முதல்வர் ஆகும் வரை வளர்ந்துள்ளேன்.அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் பெற இங்கு வந்தேன்.டெல்லி மேலிட உத்தரவுக்காக காத்திருக்கிறேன்.உத்தரவு கிடைத்தவுடன் உடனடியாக ஆளுநரை சந்திப்பேன்.


Next Story

மேலும் செய்திகள்