அஸ்ஸாம் வெள்ளம் : 10 நாட்களுக்கு பிறகு திரும்பிவரும் இயல்பு வாழ்க்கை
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த பருவமழையால், கரைபுரண்டு ஓடிய பிரம்மபுத்திரா நதியில், வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவது கரையோர மக்களிடையே மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த பருவமழையால், கரைபுரண்டு ஓடிய பிரம்மபுத்திரா நதியில், வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவது கரையோர மக்களிடையே மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது. பிரம்மபுத்திரா நதியில் உள்ள விஷ்ணு சிலை வரை உயர்ந்த வெள்ளம் அபாயகரமான நிலையில் ஓடியது. கரையோரத்தில் ஏற்பட்ட அரிப்பால், கட்டங்கள் சரிந்து விழுந்தன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்தனர். மழை குறைந்ததை அடுத்து, வெள்ளம் வடியத் தொடங்கியதால், இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. ஆற்றில் மக்கள் குளித்து வருகின்றனர்.
Next Story