காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து : நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பிரதமர் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில்,நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும், காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனையை காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பின. டிரம்ப் கருத்து தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் விளக்கம் அளித்தார். ஆனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் தம்மை மத்தியஸ்தம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி கோரியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story