சந்திரயான்- 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு

இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம், இன்று பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான்- 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது -  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு
x
கடந்த 15 ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு, நேற்று மாலை 6 மணி 43 நிமிடங்களுக்கு சந்திராயன் - 2 விண்கலத்தின் கவுண்ட்டவுன் துவங்கியது. இதனை தொடர்ந்து, பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களுக்கு சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது. விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்