தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா -நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா -நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்
x
தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் வகையில், தேசிய புலனாய்வு முகமை சட்டம்- 2008ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தீவிரவாத மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட வழக்குகளை மட்டும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆட்கடத்தல், கள்ள நோட்டு தொடர்பான குற்றங்கள், இணைய வழி தீவிரவாதம், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற பல குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை இந்த முகமைக்கு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

Next Story

மேலும் செய்திகள்