எந்த மலரையும் தேசிய மலராக அங்கீகரிக்கவில்லை : மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் விளக்கம்
இந்தியாவின் தேசிய மலராக எந்த மலரையும் அங்கீகரிக்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவின் தேசிய மலராக எந்த மலரையும் அங்கீகரிக்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும் தேசிய பறவை மயில் என்றும் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அங்கீகரித்து 2011 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு தேசிய மலர் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story