விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் காலதாமதம் ஏற்படுமா?

இந்தியாவுக்கு நாடு கடத்தும் இங்கிலாந்து உள்துறை செயலாளரின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு, அந்நாட்டு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் காலதாமதம் ஏற்படுமா?
x
ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விஜய் மல்லையா மீது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த இந்திய தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டு, அந்நாட்டு உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த வெஸ்ட் மினிஸ்டர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையா, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் மல்லையாவை நாடு கடத்துவதில் காலதாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்