ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது - டி.கே.ரங்கராஜன் எம்.பி. கோரிக்கை
ரயில்வே துறையின் சில பணிகள் மற்றும் உற்பத்தி போன்றவற்றை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென டி கே ரங்கராஜன் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வரும், ரயில்வே துறையின் சில பணிகள் மற்றும் உற்பத்தி போன்றவற்றை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி கே ரங்கராஜன் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.தனியார்மயமாக்கப்படுவதால்,அதன் சேவை பாதிக்கப்படும் என்றும், இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இட ஒதுக்கீட்டை தனியார் நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை என்றும்,இதனால்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பாதிக்கப்படுவார்கள் என்றும் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார்.
Next Story