அமர்நாத் யாத்திரை - பக்தர்கள் ஆர்வம்
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் யாத்திரை தொடங்கியது.
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் யாத்திரை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பகல்காம்., கந்தமால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகள் வழியாக அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி பால்டால் பகுதியில் இருந்து, முதலாவது யாத்திரீகர்கள் குழு புறப்பட்டனர். குதிரைகள் மற்றும் டோலிகள் மூலம், ஏராளாமானோர் இந்த பயணத்தை தொடர்ந்தனர். யாத்திரையை சீர்குலைக்கும் முயற்சியில் பயங்கரவாதிகள் ஈடுபடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story