காஷ்மீரில் மினிபேருந்து விபத்து : 35 பேர் பலி
ஜம்மு, காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் இன்று காலை மினி பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 35 பேர் பலியாகி உள்ளனர்.
ஜம்மு, காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் இன்று காலை மினி பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும் படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேஸ்வானில் இருந்து கிஸ்துவாருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த பேருந்து , ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. பேருந்தில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் உள்ளூர் மக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜம்மு காஷ்மீர் விபத்து : அமித்ஷா இரங்கல்
ஜம்மு, காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் இன்று காலை மினி பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 33 பேர் பலியாகி உள்ளனர். மேலும் படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அமித்ஷா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விபத்து - பிரதமர் இரங்கல்
ஜம்மு, காஷ்மீரில் இன்று காலை நடந்த மினிபேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், பலர் பலியானது அறிந்து மிகுந்த மனுவேதனையை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
Next Story