ஆந்திராவில் கைக் குழந்தையுடன் வந்த மகளை பெற்றோரே அடித்து கொலை...
ஆந்திர மாவட்டம் சித்தூர் அருகே கைக் குழந்தையுடன் பார்க்க வந்த பெண்ணை, பெற்றோரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் பலமனேர் பகுதியில் ஹேமாவமி என்ற பெண், அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை காதலித்துள்ளார். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் கைக் குழந்தையுடன் சென்று பெற்றோரை ஹேமாவதியும், கேசவனும் சமதான செய்ய முயன்றனர். ஆனால், இருவரையும் அடித்து உதைத்த ஹேமாவதியின் பெற்றோர்கள், ஹேமாவதியை தூக்கில் தொங்கவிட்டு அவரது சடலத்தை வீசினர். இதனை அறிந்த கேசவனின் குடும்பத்தினர், ஹேமாவதியின் பெற்றோர் வீட்டை சூறையாடினர். இதனால், இரு சமுதாய மக்களுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹேமாவதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகளையே கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story