5 கிலோ தங்க நகை கொள்ளை : கொள்ளையர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

ஆந்திர மாநிலம் சித்தூரில் 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலுக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
5 கிலோ தங்க நகை கொள்ளை : கொள்ளையர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x
ஆந்திர மாநிலம் சித்தூரில் 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலுக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு பங்காரு பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் 5 கிலோ தங்கத்தை, 7 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கை விசாரித்து வந்த ஆந்திர போலீசார், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சித்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், 7 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்