நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்
பல்வேறு மாநிலங்களில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தார்.
பல்வேறு மாநிலங்களில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தார். மாநிலங்களவையில் பேசிய அவர், தொடர்ச்சியாக நீர் உறிஞ்சப்படுதல், தண்ணீர் தேவை அதிகரிப்பு, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால், பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில், ஆய்விற்கு எடுக்கப்பட்ட 528 கிணறுகளில், 318 கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், இது கிட்டதட்ட 60 சதவீதம் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story