திருப்பதி : பக்தர் காரில் பதுங்கிய 8 அடி நீள சாரைப் பாம்பு
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்னும் பக்தர் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்னும் பக்தர் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபம் அருகே காரை நிறுத்தி விட்டு சாமி தரிசனத்திற்கு சென்றார். கார் ஒட்டுநர், அங்குள்ள வணிக வளாகத்திற்கு சென்று விட்டு, திரும்பிய போது, காருக்குள் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காருக்குள் பாம்பு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பாஸ்கர் நாயுடு, 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை கடும் சிரமத்திற்கு மத்தியில் வெளியில் எடுத்தார்.
Next Story