ரூ.105 கோடியில் யானைகள் மறுவாழ்வு மையம் : சர்வதேச தரத்தில் அமைக்கும் கேரள அரசு
சர்வதேச தரத்தில் 105 கோடி ரூபாயில் யானைகள் மறுவாழ்வு மையத்தை கேரள அரசு அமைக்க உள்ளது.
சர்வதேச தரத்தில் 105 கோடி ரூபாயில் யானைகள் மறுவாழ்வு மையத்தை கேரள அரசு அமைக்க உள்ளது. திருவனந்தபுரம் அருகே காப்புக்காடு பகுதியில் அமைக்கப்படும் யானைகள் மறுவாழ்வு மைய பணிகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அப்போது, கேரளாவின் அடையாளமான யானைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதாக பினராயி விஜயன் கூறினார். 50 யானைகளை பராமரிக்கும் வகையில் இந்த மையம் அமைய உள்ளதாகவும் அவர் கூறினார். காட்டிலிருந்து ஊருக்குள் புகும் யானைகள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் மதம் பிடித்த யானைகளுக்கு இங்கு மறு வாழ்வு அளிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
Next Story