புதுச்சேரியில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் தடை
புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 50 மைக்கரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச் சூழல் அமைச்சர் கந்தசாமி, தமிழகத்தை போன்று பிளாஸ்டி பைகள் உட்பட 14 பொருட்களை தடை செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து காலஅவகாசம் கோரி அமைச்சருக்கு, வணிகர்கள், சிறு வியாபாரிகள் கோரிக்கைகள் வைத்தனர். அதனால் இதுவரை பிளாஸ்டிக் தடைசெய்யப்பட வில்லை. இந்நிலையில் இன்று புதுச்சேரியில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கந்தசாமி சட்டப் பேரவையை கூட்டி விவாதித்து எந்த எந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story