மத்திய அமைச்சர்கள், ஏழுமலையான் கோவிலில் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நுகர்வோர் மற்றும் உணவு விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நுகர்வோர் மற்றும் உணவு விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். இதேபோல், மத்திய ரயில்வே மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். மத்திய அமைச்சர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், பிரதமர் மோடி தலைமையில் மக்களுக்கு நல்ல சேவை வழங்கப்படும் என்றார்.
Next Story