பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் : அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புத் தேர்தல் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் : அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம்
x
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புத் தேர்தல் புதுடெல்லியில் நடைபெற்று  வருகிறது. கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் முன்னதாக பல்வேறு மாநிலங்களிலும்  அமைப்பு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில், புதிய உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றன. கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மூத்த தலைவர்கள் ஜே பி நட்டா புபேந்திர யாதவ் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்