பார் கவுன்சில் பெண் தலைவர் சுட்டுக்கொலை : சக வழக்கறிஞரே, சுட்டுக்கொன்றதால் பரபரப்பு
உத்தரபிரதேச மாநில பார் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்ட தர்வேஷ் யாதவ் என்ற பெண், சக வழக்கறிஞர் மனிஷ் ஷர்மா என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பார் கவுன்சில் தலைவராக, தர்வேஷ் யாதவ், நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்று கொண்டிருக்கும் போது, சக வழக்கறிஞர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். பின்னர் மனிஷ் தம்மை தாமே தலையில் சுட்டுக் கொண்டுள்ளார். சம்பவ இடத்திலேயே, தர்வேஷ் யாதவ் உயிரிழந்த நிலையில் மனீஷ் சர்மா படுகாயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆக்ரா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story