ஆந்திராவில் ஆற்று மணல் எடுக்க தடை...
ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு அம்மாநில அரசு தடை செய்துள்ளது.
ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு அம்மாநில அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மணல் முறைகேட்டை தடுக்கும் விதமாக, தற்போதுள்ள மணல் எடுக்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மணலை இலவசமாக எடுத்துக் கொள்ளும் சட்டத்தை பயன்படுத்தி வெளி மாநிலங்களுக்கு முறைகேடாக மணல் கடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற பின்னர், மணல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதுள்ள மணல் கொள்கை ரத்து செய்யப்படுவதாகவும், புதிய கொள்கை ஜூலை 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Next Story