கேரள மாநிலத்தில் தீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை ஒட்டி கேரளாவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
கோழிக்கோட்டில் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. காற்றும் பலமாக வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மட்டும் திருவனந்தபுரத்தில் 32 மில்லி மீட்டரும், கொச்சியில் 23 மில்லி மீட்டரும், புனலூரில் 12 மில்லி மீட்டரும், கோட்டயத்தில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில், ஆலப்புழா, மலப்புரம், இடுக்கி, கண்ணூர், பாலக்காடு, திருவனந்தபுரம், திரிச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story