ஆந்திர மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு மீண்டும் அனுமதி - ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு மீண்டும் அனுமதி அளித்து, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு மீண்டும் அனுமதி அளித்து, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அனுமதி மறுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை அப்போதே எதிர்த்து வந்த ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றதும், சி.பி.ஐ.க்கு அனுமதி மறுத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, சிபிஐக்கு வழக்கமான அதிகாரங்களை வழங்கும் விதமாக அரசாணை பிறப்பித்துள்ளார்.
Next Story