ராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி இல்லை - முதல்வர் நாராயணசாமி உறுதி

ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
ராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி இல்லை - முதல்வர் நாராயணசாமி உறுதி
x
ஆட்சியை மத்திய அரசு கலைத்தாலும், மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை தூக்கியெறிந்து மதச்சார்பற்ற அணியோடு  இணைந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர், புதுச்சேரியில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வேதாந்தா நிறுவனமோ அல்லது மத்திய அரசு இராணுவத்துடன் வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காலத்திலும்  அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்