தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது - டி.கே.சிவக்குமார்

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள 9 புள்ளி 19 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது - டி.கே.சிவக்குமார்
x
பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரிப் படுகையில் உள்ள நான்கு அணைகளிலும் சேர்த்து மொத்தம் 13 டிஎம்சி நீர் மட்டுமே, இருப்பில் உள்ளதாக கூறியுள்ளார். அணைக்கு, நீர் வரத்து குறைவாக உள்ளதால், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள 9 புள்ளி 19 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே ஆணையம் உத்தரவிட்டுள்ள நீரை முழுமையாக தமிழகத்திற்கு திறந்து விட முடியும் என்றும், சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். தொடர்ந்து இதே நிலை நீடித்தால், விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் சிவக்குமார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்