டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மெட்ரோ ரயிலிலும், மாநகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு பேருந்து, டெல்லி மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் மெட்ரோ ரயிலில் பெண்களின் இலவச பயணத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு இலவச சேவை வழங்குவதன் மூலமான முழு செலவையும் டெல்லி அரசு ஏற்கும் எனவும், இலவச பயணத்தை விரும்பாத பெண்கள் டிக்கெட் வாங்கி பயணிக்கலாம் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி பேருந்துகளில் நாள்தோறும் பயணிக்கும் 30 லட்சம் பேரில் 25 சதவீதம்பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் அம்மாநில அரசுக்கு கூடுதலாக செலவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story