காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மீறினால் போராட்டம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தின் உரிமையை காக்க கர்நாடக மற்றும் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மீறினால் போராட்டம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை
x
புதுச்சேரியில் மாநில திமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காரைக்கால் மாவட்டத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வந்தாலும் காவிரி விவகாரத்தில் விட்டுக்கொடுக்க போவதில்லை எனவும்  கூறினார். புதுச்சேரி மாநிலத்தின் உரிமையை காக்க தமிழகம் மற்றும் கர்நாடக அரசை எதிர்த்து போராடுவோம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்