ராகுல் காந்தி, சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாஜக அல்லாத ஆட்சியை ஏற்படுத்த சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், உள்ளிட்டோரை நேற்று சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்தித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Next Story