"பிரதமரானால் ஏழைகளுக்கு நிரந்தர வேலை" - மாயாவதி

ஏழைகளுக்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் நிரந்தர வேலை வழங்க ஏற்பாடு செய்வதாக மாயாவதி உறுதி அளித்தார்.
பிரதமரானால் ஏழைகளுக்கு நிரந்தர வேலை - மாயாவதி
x
ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மாவு பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மிக ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் வாக்குகளை குறி வைத்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள அறிவிப்பால், ஏழ்மையை நிரந்தரமாக நீக்க முடியாது என தெரிவித்துள்ளார். மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தால், 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக, ஏழைகளுக்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் நிரந்தர வேலை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் மாயாவதி உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்