2018 - 19 ஆம் ஆண்டுக்கான இந்தியன் வங்கி வர்த்தகம் 16 சதவீதம் உயர்வு - பத்மஜா சந்துரு
இந்தியன் வங்கியின் வராக்கடன் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியன் வங்கியின் வராக்கடன் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு, கடந்த நிதியாண்டில் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 16 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டார். வங்கியின் பொதுமேலாளர் செழியன் கூறுகையில், கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாகவும், அதில் விவசாய கடன்கள் திரும்பி வருவது அதிகமாக உள்ளதாக கூறினார். வாராக்கடன் 7 புள்ளி15 சதவீதமாக உள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக வாராக்கடன் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாய் என்றும் செழியன் குறிப்பிட்டார்.
Next Story