திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்திய இசைக்கு மத்தியில், பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பிரம்மோற்சவத்திற்கான கருட கொடி ஏற்றப்பட்டது. விழாவின் 5ஆம் நாளன்று கருடவாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து18ம் தேதி ரத உற்சவமும், 19ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வைகுண்டம் கியூ காம்ளக்சில் பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையாக காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டம் காரணமாக, தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல், பக்தர்கள் பலர் , பூங்காக்களில் தங்கியுள்ளனர். தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு குடிநீர், மோர், பால், தயிர் சாதம் ஆகியவை வழங்கப்படுகின்றன. தங்கும் விடுதிகளில் உள்ள பக்தர்களை 24 மணி நேரத்திற்குள் அறையை காலி செய்யுமாறு காவல்துறையினர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கூட்டம் காரணமாக இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணிநேரத்திற்கும் மேலாக காத்து கிடந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story