பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், நன்கொடைகள் : தேவஸ்தான விதிகளுக்கு உட்பட்டு செலவு
பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், நன்கொடைகள் அனைத்தும் தேவஸ்தான விதிகளுக்கு உட்பட்டு செலவு செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஆயிரத்து 381 கிலோ தங்கம் சமீபத்தில், தேர்தல் பறக்கும் படையினரால் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதை அடுத்து அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பிய நிலையில், தேவஸ்தான செயல் அலுவலர் அணில் குமார் சிங்கால் விளக்கம் அளித்துள்ளார்.பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், நன்கொடைகள் அனைத்தும் தேவஸ்தான விதிமுறைகளின் படி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு செலவு செய்யப்படுவதாக அவர் கூறினார். மீதமுள்ள தொகைகள் வங்கியில் முதலீடு செய்யப்படுவதாகவும், பக்தர்கள் இது குறித்து எந்தவித கவலையும் அடைய தேவையில்லை எனவும் சிங்கால் தெரிவித்தார். திருமலையில் கோடைக்காலத்தில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூலை 15ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் செயல் அலுவலர் சிங்கால் குறிப்பிட்டார்.
Next Story