மேற்கு வங்கத்தில் ஃபானி புயல் ஆவேசம்...90 கி.மீ. வேகத்தில் சுழன்றடிக்கும் காற்று
ஒடிசாவில் நேற்று கரையை கடந்த ஃபானி புயல், வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறியுள்ளது.
ஒடிசாவில் நேற்று கரையை கடந்த ஃபானி புயல், வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறியுள்ளது. அதிகாலை 3.20 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தின் காரக்பூரில் கரையை கடக்க தொடங்கிய நிலையில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழையும் கொட்டி வருகிறது. இதனிடையே, பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையம் காலை 8 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story