பசி கொடுமை மண்ணை அள்ளி தின்ற குழந்தை - வயிறு கோளாறால் குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் பசியின் கொடுமையால் மண்ணை தின்ற இரண்டு வயது குழந்தை வயிறு கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட சாலையோர பகுதியில், கர்நாடகா மாநிலம் குதிபண்டலா கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் நீலவேணி தம்பதியினர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில், நீலவேணியின் அக்காள் மகளையும் அவர்களுடன் வளர்த்து வந்துள்ளனர்.2 வயதுடைய நீலவேணியின் அக்காள் மகள் வனிதா, பசிக் கொடுமையால் தரையில் இருந்த மண்ணை அள்ளித் தின்றதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தை வனிதாவுக்கு வயிறு கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தாள். இதனால், அதிர்ச்சி அடைந்த,மகேஷ், நீலவேணி தம்பதியினர், வணிதாவின் உடலை அருகிலேயே புதைத்து விட்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, குழந்தையின் உடலை தோண்டி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியபோது, மண்ணை அள்ளி தின்றதால் குழந்தை- உயிரிழந்தது தெரிய வந்தது.
Next Story