நாளை கரையை கடக்கிறது பானி புயல்? - ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

பானி புயல் ஒடிசாவில் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை கரையை கடக்கிறது பானி புயல்? - ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
x
வங்கக் கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி மாவட்ட  கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. அப்போது மணிக்கு 175 முதல் 186 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி 43 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலம் பாடுகுபாடு ( PADUGUPADU ) உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்