ஒடிசாவை நோக்கி நகரும் ஃபானி புயல் : கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையை கடக்கும் - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தின் பூரி நகரின் தென்பகுதியை, ஃபானி புயல் தாக்கும் என, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவை நோக்கி நகரும் ஃபானி புயல் : கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையை கடக்கும் - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு
x
ஒடிசா மாநிலத்தின் பூரி நகரின் தென்பகுதியை, ஃபானி புயல் தாக்கும் என, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கோபால்பூர் மற்றும் சந்த்பாலி, கடற்கரையோரம் வருகிற 3 ஆம்தேதி, அதாவது வெள்ளிக்கிழமையன்று, இந்த புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில், சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் தேசிய பேரிடர்  மேலாண்மை ஆணையம்  கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்